சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி


சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
x

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கால் நாட்டு நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கால் நாட்டு நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்.

சொரிமுத்து அய்யனார் கோவில்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வர்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அதனை முன்னிட்டு நேற்று கோவில் பரம்பரை அறங்காவலர் சங்கராத்மஜன் தலைமையில் கால்நாட்டு நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

பக்தர்கள் விரதம் தொடங்கினர்

முன்னதாக மாகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர், இசக்கியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கால்நாட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காப்புக் கட்டி 10 நாள் விரதத்தை தொடங்கினர்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முருகன், கோவில் பணியாளர்கள் பசுபதி, சட்டநாதன், காந்திமதி நாதன், ராக்கமுத்து, முருகதாஸ் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story