தூத்துக்குடி அருகே சித்தர் பீடத்தில் ஆடி அமாவாசை மஹா யாகம் புதன்கிழமை நடக்கிறது


தூத்துக்குடி அருகே சித்தர் பீடத்தில் ஆடி அமாவாசை மஹா யாகம் புதன்கிழமை நடக்கிறது
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 1:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே சித்தர் பீடத்தில் ஆடி அமாவாசை மஹா யாகம் புதன்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் பீடத்தில் பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் ஆலயம் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை மறுநாள் (புதன்கிழமை) மஹா யாகம் நடக்கிறது. அன்று காலை 9.10 மணிக்கு கணபதி, நவக்கிரக ஹோமம், மஹா பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன்தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், திருமணவரன், குழந்தை பாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கேற்ப அரசு வேலை கிடைத்திடவும், நன்கு மழை பெய்து விவசாயம் சிறப்பாக நடைபெறவும் வேண்டி சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் இந்த சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடக்கிறது.

மதியம் 12மணிக்கு பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகமும், மதியம் 1.20 மணிக்கு மஹா தீபாரதனையும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து மதியம் 1.3 0மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த யாகத்தில் அனைத்து பக்தர்களும் கலந்து கொள்ளுமாறு சற்குரு சீனிவாச சித்தர் கேட்டுக் கொண்டு உள்ளார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story