திருத்துறைப்பூண்டி வீரமாகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா


திருத்துறைப்பூண்டி வீரமாகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
x

திருத்துறைப்பூண்டி வீரமாகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி ஆட்டூர் ரோட்டில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலையில் வெட்டுக்குளக்கரையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து வந்து சாமிக்கு பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story