தேவகோட்டை பாண்டி முனீஸ்வரர் கோவிலில் ஆடி திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
தேவகோட்டை பாண்டி முனீஸ்வரர் கோவிலில் ஆடி திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
தேவகோட்டை
தேவகோட்டை பாண்டி முனீஸ்வரர் கோவிலில் ஆடி திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
ஆடி திருவிழா
தேவகோட்டையில் ரெகுநாதபுரம், சிதம்பரநாதபுரம் கைலாசநாதபுரம் சந்திப்பில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவிலில் ஆடி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 4-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.
விழாவில் ஒவ்வொரு நாளும் பாண்டி முனீஸ்வரருக்கு சங்காபிஷேகம், சிறப்பு யாக வேள்வி, அக்னி சட்டி எடுத்தல், பூச்சொரிதல் விழா நடைபெற்று வந்தது.
நேர்த்திக்கடன்
இதை தொடர்ந்து ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பாண்டி முனீஸ்வரருக்கு பால்குடம் எடுக்கும் விழா நடைபெற்றது,
சிலம்பணி தெற்கில் அமைந்துள்ள கருப்பர் கோவிலில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து மேளதாளங்களுடன் அலகு குத்தி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.