சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா


சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா
x

மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோயம்புத்தூர்

வடவள்ளி

மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி கிருத்திகை

ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி முருகனின் ஏழாவது படை வீடு என பக்தர்களால் கொண்டாடப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று அதிகாலை 6 மணிக்கு கோபூஜை, 6.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து தங்கக்கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அபிஷேகம்

இதையடுத்து உஷகால பூஜை, மகா தீபாராதனை, கால சந்தி பூஜை நடைபெற்றது. ஆடி கிருத்திகை என்பதால் பக்தர்கள் பால்குடம், பால்காவடி எடுத்து மலைப்பாதை வழியாக நடந்து வந்தனர்.

சிங்காநல்லூரை சேர்ந்த ஆடி கிருத்திகை காவடி குழுவி னர் காவடி எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.

பகல் 12 மணிக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால் குடங்களால் ஆதிமூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி, வள்ளி -தெய் வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது.

உச்சிக்கால பூஜையை தொடர்ந்து முருக பெருமான் வள்ளி -தெய்வானையுடன் கோவில் முன்புற மண்டபத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருளினார்.

சாமி தரிசனம்

இதைத்தொடர்ந்து சுவாமி தம்பதி சமேதராக கோவிலை சுற்றி உலா வந்தார். மாலை 4 மணியளவில் மீண்டும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், 5 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் முருகப் பெருமான், வள்ளி -தெய்வானை சமேதராக வீதி உலா வந்தார். 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை 6 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி எழுந்தருளினார்.

இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story