உக்தவேதீஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை தெப்ப உற்சவம்


உக்தவேதீஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை தெப்ப உற்சவம்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை தெப்ப உற்சவம்

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வனமுலைநாயகி உடனாகிய உக்தவேதீஸ்வரர் சாமி கோவில் உள்ளது. சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும், சுந்தரர் தோல் நோய் நீக்கிய தலமாகவும் இந்த தலம் விளங்குகிறது. சுமார் 62 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலின் குடமுழுக்கு விழா கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 40 வருடங்களுக்கு பிறகு ஆடி கிருத்திகை தெப்ப உற்சவ திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று முருகப்பெருமான் பட்டாடை உடுத்தி அணிகலன்கள் அணிந்து கைலாய வாத்தியங்கள், மேள வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து புறப்பாடு செய்யப்பட்டது. பின்னர் 4 ரதவீதிகளிலும் வீதி உலா நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமான் கோவிலின் திருக்குளத்தில் எழுந்தருளி தெப்பத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story