ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 24-ம் ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வேலூர்


வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேதீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 24-ம் ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி தினமும் காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும், பஞ்ச மூர்த்திகள் அபிஷேகமும் நடந்தது. வருகிற 1-ந் தேதி வரை தினமும் பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், மாலையில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.

1-ந் தேதி அன்று காலை 9 மணிக்கு ஆடிப்பூரம் தீர்த்தவாரியும், காலை 10.25 மணிக்கு அம்பாள் அபிஷேகமும், வளையல் சாற்றுதல், அர்ச்சனை தீபாராதனை நடக்கிறது.

----

Reporter : T. ALWIN_Staff Reporter Location : Vellore - VELLORE


Next Story