பூரண மதுவிலக்குக்காக போராடும் ஒரே கட்சி பா.ம.க.


பூரண மதுவிலக்குக்காக போராடும் ஒரே கட்சி பா.ம.க.
x

தமிழகத்தில் பூரண மதுவிலக்குக்காக போராடும் ஒரே கட்சி பா.ம.க. தான் என்று டாக்டர் அன்புமணிராமதாஸ் எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

தமிழகத்தில் பூரண மதுவிலக்குக்காக போராடும் ஒரே கட்சி பா.ம.க. தான் என்று டாக்டர் அன்புமணிராமதாஸ் எம்.பி. கூறினார்.

பொதுக்கூட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கீழவீதியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

நான் டெல்டா பகுதியை மிகவும் விரும்புபவன். இந்த பகுதி சோறு போடும் பகுதி. இந்த மண்ணையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. காவிரி டெல்டாவை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தது நான் தான்.

மேதாது அணை கட்ட முடியாது

சமீபத்தில், கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி சிவக்குமார், 5 ஆண்டுகளில் நீ்ரப்பாசன துறைக்காக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கி திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும், மேகதாது அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. கட்டவும் முடியாது.நீர்ப்பாசன துறைக்காக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என இலக்கு வைத்துள்ளனர். இதுவல்லவா இலக்கு. நமது மாநிலத்தில் தற்போது மது விற்பனை மூலம் ரூ.50 ஆயிரம் கோடி என்பதை வரும் மூன்று ஆண்டுகளில் ரூ.80 ஆயிரம் கோடி என்ற அளவில் இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.

பூரண மதுவிலக்குக்காக போராடும் கட்சி பா.ம.க.

தமிழகத்தில் பூரண மதுவிலக்குக்காக போராடும் ஒரே கட்சி பா.ம.க. தான். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்கின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 70 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். கடந்த 55 ஆண்டுகளாக 2 கட்சிகளுக்கு வாய்ப்பு ெகாடுத்தீர்கள், வருகிற 5 ஆண்டுகள் மட்டும் பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் மாவட்ட தலைவர் அமிர்த கண்ணன், உழவர் பேரியக்க செயலாளர் கோ.ஆலயமணி, மாநில செயற்குழு உறுப்பினர் பானுமதி சத்யமூர்த்தி உள்பட பலர் பேசினர். முன்னதாக மாவட்ட செயலாளர் தி.ஜோதிராஜ் வரவேற்றார்.

நினைவு பரிசு

திருவிடைமருதூர் தேரோடும் வீதியில் தேர் போன்று பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், பிரமாண்ட சுத்தியல் ஒன்றை வழங்கினார். மாவட்ட பா.ம.க. சார்பில் ஏர் கலப்பை நினைவு பரிசு வழங்கப்பட்டது. திருவிடைமருதூர் பா.ம.க சார்பில் தேர் படம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story