கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி ஐந்து விலக்கு அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றிற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் அழகர்சாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் சிவாஜி காந்தி முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைசெயலாளர் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா குழு உறுப்பினர்கள் தெட்சிணாமூர்த்தி, பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்டு சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் பாண்டித் துரை, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.


Next Story