தாமிரபரணி ஆற்றில் ஆடிப்பெருக்கு ஆரத்தி பூஜை


தாமிரபரணி ஆற்றில் ஆடிப்பெருக்கு ஆரத்தி பூஜை
x

அம்பை தாமிரபரணி ஆற்றில் ஆடிப்பெருக்கு ஆரத்தி பூஜை நடைபெற்றது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தாலிபெருக்கும் நிகழ்ச்சி நடத்தினர். மேலும் காசிநாதர் கோவிலில் இருந்து தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலிகள் வழிபாடு நடத்தினர். மேலும் மாலையில் தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதேபோல் காசி விசுவநாதர் கோவில் படித்துறையில் திரளான பெண்கள் திரண்டு தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடும், ஆரத்தி பூஜையும் நடத்தினர்.

விழாவில் திருமூலர் தவமையம் மீனாட்சி நாதன், அம்பை நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன், அம்பை வியாபாரிகள் சங்க தலைவர் பண்ணை சந்திரசேகர், செயலாளர் ராமசாமி, காசி விசுவநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வாசுதேவராஜா, இந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில நிர்வாகி சங்கரநாராயணன் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story