ஆவின் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
திருப்பத்தூர் மாவட்டத்தில் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படும் என ஆவின் பொதுமேலாளர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படும் என ஆவின் பொதுமேலாளர் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் (ஆவின்) சங்க இயக்குனர்கள் மற்றும் பால்கூட்டுறவு சங்க செயலாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆவின் பொதுமேலாளர் ரவிக்குமார், துணைப் பதிவாளர் விஸ்வேஸ்வரன், துணைப் பொது மேலாளர் கோதண்டராமன் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட பால் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் மற்றும் கூட்டுச் சங்க செயலாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய பால் கூட்டுறவு சங்கங்களை திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முடிவில் மேளாளர் நரசிம்மன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உருவாக்கி கொடுத்த முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவிப்பது. பால் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் இலக்காக நிர்ணயித்து அதற்கு ஏதுவாக புதிய சங்கங்கள் தொடங்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் பொது மேலாளர் ரவிக்குமார் கூறியதாவது:-
பால் பொருட்கள் உற்பத்தி
திருப்பத்தூரில் புதிய பால் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்ட அரசு பூங்கா பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 15 நாட்களில் புதிய பால் கூட்டுறவு சங்க கட்டிடம் திறக்கப்படும். தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்கிறது. இதனை உயர்த்த திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் திறக்கப்படும்.
பால் பொருட்கள் உற்பத்தியை தொடங்க 15 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.