ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி அபேஸ்


ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம்  4 பவுன் தங்க சங்கிலி அபேஸ்
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாரம் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கொட்டாரம் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பஸ்சில் புறப்பட்டார்

மண்டைக்காடு அருகே உள்ள அழகன்பாறை கோவிலான்விளையை சேர்ந்தவர் ஜெபமணி. இவருடைய மனைவி ஜெய ரஞ்சிதம் (வயது72). இவர் சம்பவத்தன்று வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனது பேக்கில் 4 பவுன் தங்க சங்கிலி வைத்திருந்தார்.

அந்த பஸ் கொட்டாரம் அருகே சென்று கொண்டிருந்த போது ஜெய ரஞ்சிதம் பேக்கை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த 4 பவுன் சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து பஸ் முழுவதும் தேடினர். ஆனால் தங்க சங்கிலி கிடைக்கவில்லை. நகையை யாரோ திருடி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

போலீசில் புகார்

இதுகுறித்து ஜெயரஞ்சிதம் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை யாராவது திருடி சென்றார்களா? அல்லது அவர் தவற விட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

இதற்கிைடயே ஜெயரஞ்சிதம் வடசேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அவருடைய அருகில் ஒரு பெண் சந்தேகப்படும் வகையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த பெண் நகையை திருடி சென்றாரா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story