ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ்
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ்
கன்னியாகுமரி
திங்கள்சந்தை:
பாலப்பள்ளம் அருகே வழுதலம்பள்ளம் ஒப்பிவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கநாடார். இவருடைய மனைவி பகவதி (வயது 65).
இவர் நேற்று முன்தினம் மணவாளக்குறிச்சி செல்வதற்காக திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறினார். அப்போது, பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அந்த பஸ் மாங்குழி நிறுத்தத்தில் நின்றது. அப்போது பகவதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, பஸ்சிற்குள் நகையை தேடினார். ஆனாலும் நகை கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகையை அபேஸ் செய்தது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து பகவதி இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story