ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 9:09 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பிளசன்ட் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ஜாய்ஸ்மேரி (வயது 58). இவர் நேற்று முன்தினம் இரவு செட்டிகுளம் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளத்துக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார். ஆசாரிபள்ளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஜாய்ஸ்மேரி ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பஸ்சில் பயணம் செய்த போது மர்மநபர் நகையை அபேஸ் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.


Next Story