அரசு பஸ் டிரைவரிடம் 5 பவுன் நகை அபேஸ்


அரசு பஸ் டிரைவரிடம் 5 பவுன் நகை அபேஸ்
x

அம்பையில் அரசு பஸ் டிரைவரிடம் 5 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி மேல்முகநாடார் தெருவை சேர்ந்தவர் திரவியம் ஜெபக்குமார் (வயது 48). அரசு பஸ் டிரைவர். இவர் சம்பவத்தன்று வங்கியில் அடகு வைத்த 5 பவுன் நகையை மீட்டு தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து வீட்டிற்கு சென்றார். அப்போது கல்லிடைக்குறிச்சி அருகே ஒரு மருந்து கடையில் மருந்து வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு சென்றார்.

பின்னர் வந்த போது அவரது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகளை மர்மநபர்கள் அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் திரவியம் ஜெபக்குமாரை பின் தொடர்ந்து வருவது தெரியவந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story