அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர் திருக்கல்யாணம்


அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 3 May 2023 12:30 AM IST (Updated: 3 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் சித்திரை திருவிழாவையொட்டி அபிராமி அம்மன்- பத்மகிரீசுவரருக்கு திருக்கல்யாணம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய உற்சவ நிகழ்ச்சியான அபிராமி அம்மன்- பத்மகிரீஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணியளவில் சுவாமி நடராஜருக்கு திருக்கல்யாண மங்கள அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டு புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து மாலை 5 மணியளவில் திருக்கல்யாண உற்சவ நிகழ்வுகள் தொடங்கின. இதில் மாப்பிள்ளை அழைப்பு, காசி யாத்திரை, மாலை மாற்றுதல், பாத பூஜை, ஊஞ்சல் அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. பின்னர் திருமாங்கல்ய தாரணம் என்னும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அப்போது சுமங்கலி பெண்கள் புதிய தாலி அணிந்து கொண்டனர். அதன்பிறகு மகா தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர் பூப்பல்லக்கில் வீதி உலா தொடங்கி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்தது. மேலும் சித்திரை திருவிழாவில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.


Next Story