அபிராமி அம்மன் வீதி உலா


அபிராமி அம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 19 July 2023 6:45 PM GMT (Updated: 19 July 2023 6:46 PM GMT)

அபிராமி அம்மன் வீதி உலா நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோ விலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சாமி வீதி உலா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று முன்தினம் யாளி வாகனத்தில் அபிராமி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோவிலை சுற்றி உள்ள 4 வீதிகளில் உலா வந்த அபிராமி அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருத்தகிரி, கணேச குருக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story