நாடு முழுவதும் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு


நாடு முழுவதும் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
x

நாடு முழுவதும் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.

சென்னை,

ஆர்டர்லி வேலை செய்ய மறுத்ததால் தன்னை பணி நீக்கம் செய்து விட்டதாக சென்னை ஐகோர்ட்டில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.,) போலீஸ்காரராக வேலை செய்த முத்து என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுதாரரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, அனைத்து பண பலன்களுடன் அவருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், ''ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். மத்திய போலீஸ் படைகளில் ஆர்டர்லியாக வேலை செய்யும் போலீஸ்காரர்களை மீட்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் போலீஸ்காரர்களை ஆர்டர்லி வேலை செய்ய உத்தரவிடும் உயர் அதிகாரிகள் மீது பணி விதிகள் மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் நீதிபதி கூறியுள்ளார்.


Next Story