சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x

புகார்தாரருக்கு ஆதரவாக செயல்பட்ட பூதப்பாண்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

புகார்தாரருக்கு ஆதரவாக செயல்பட்ட பூதப்பாண்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

சப்-இன்ஸ்பெக்டர்

பூதப்பாண்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக இருந்து வந்தவர் சுந்தர்ராஜ் (வயது 58). இவர் நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த ஒரு நபரின் அசல் நிலப்பத்திரம் பூதப்பாண்டி போலீஸ் நிலைய பகுதியில் தவற விட்டதாக வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கில் உரிய விசாரணை மற்றும் எந்தவொரு ஆவணமும் இல்லாமல் புகார் கொடுத்தவருக்கு ஆதரவாக சுந்தர்ராஜ் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பணியிடை நீக்கம்

இதுதொடர்பாக துறைரீதியாக உரிய விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story