அனுமதி இன்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றதாக 5 பேர் மீது வழக்கு
அனுமதி இன்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்துக்குட்பட்ட வடவன்பட்டி கிராமத்தில் உள்ள கொம்பு இட அம்மன் ஸ்ரீ முனிநாதர் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. அனுமதி இன்றி மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றதாக கிராம நிர்வாக அலுவலர் லாவண்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் வடவன் பட்டியை சேர்ந்த நல்ல கருப்பன் மகன் வெள்ளைச்சாமி (வயது 63), சிவனடியான் மகன் சிவசங்கரன் (60), கதிரேசன் மகன் பொன்னம்பலம் (62), முத்தையா மகன்
துரைராஜ் (75), நாகலிங்கம் மகன் சேகர் உள்ளிட்ட 5 பேர் மீது எஸ்.எஸ். கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story