தனுஷ்கோடி அருகே சுமார் 10 கிலோ தங்கம் பறிமுதல் - மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை


தனுஷ்கோடி அருகே சுமார் 10 கிலோ தங்கம் பறிமுதல் - மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை
x

தனுஷ்கோடி அருகே சுமார் 10 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

தனுஷ்கோடி,

இலங்கையிலிருந்து நாட்டுப் படகில் தனுஷ்கோடி பகுதிக்கு தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் படகில் சென்று தனக்குரிய கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக ஒரு படகு வந்தது. அதனை மடக்கி விசாரணை செய்தபோது படகில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து படகை தீவிர சோதனை செய்ததில் படகில் இருந்த சுமார் ஒன்பது முதல் 10 கிலோ எடை உள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்து மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story