அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலை பற்றி சந்தேகப் பேர்வழிகளுக்கு பதில் சொல்ல அவசியமில்லை


அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலை பற்றி சந்தேகப் பேர்வழிகளுக்கு பதில் சொல்ல அவசியமில்லை
x

அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலை பற்றி சந்தேகப் பேர்வழிகளுக்கு பதில் சொல்ல அவசியமில்லை என மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மதுரை

அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலை பற்றி சந்தேகப் பேர்வழிகளுக்கு பதில் சொல்ல அவசியமில்லை என மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மதுரையில் நிகழ்ச்சி

மதுரையில் நேற்று காலையில், நடப்போம் நலம்பெறுவோம் என்ற திட்டத்தின் கீழ் ரேஸ்கோர் பகுதியில் பொதுமக்கள் 8 கி.மீ நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் புதிதாக ரூ.6 கோடியே 34 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 15 ஆரம்ப சுகாதார நிலைய மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் குழந்தைகள் நல மையத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஓமியோபதி மருத்துவக்கல்லூரி சேதமடைந்து உள்ளதால், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்திற்கு அருகிலேயே 5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக ஓமியோபதி மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. அடுத்த நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.

மதுரை எய்ம்ஸ் பணிகள்

எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான நிதி சார்ந்த பணிகள் குறித்து ஜெய்கா அமைப்பின் துணை தலைவரை சந்தித்து கேட்டோம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டெண்டர் 2024-க்குள் முடித்து, கட்டிடம் கட்டி முடிக்க 2028-ம் ஆண்டு இறுதி ஆகிவிடும் என தெரிவித்து உள்ளனர். மத்திய அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், ஜெய்கா நிறுவனத்திடம் தமிழக அரசின் மூலமாக நாமே தன்னிச்சையாக பேசி நிதியை கோரியிருக்கிறோம். மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எண்ணத்தில்தான் ஆண்டுதோறும் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தி வருகிறோம். விரைவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பேச உள்ளோம். அதன்படி, 2028-ம் ஆண்டிற்குள் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும்.

செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எத்தனை அடைப்புகள் இருந்தன, எது மாதிரியான சிகிச்சை எடுக்கப்பட்டது என சந்தேகம் வருபவர்கள் மருத்துவமனை சென்று தெரிந்து கொள்ளலாம். செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்த சந்தேகப் பேர்வழிகளுக்கு பதில் சொல்ல அவசியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story