கோா்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
கோா்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் 3 மாதங்கள் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
கங்கைகொண்டான்:
நெல்லை அருகே கங்கைகொண்டான் கலைஞர் காலனியை சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 36). இவரை கங்கைகொண்டான் போலீசார் ஒரு வழக்கில் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்த நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்கு சத்தியசீலன் கடந்த 3 மாதங்களாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று கங்கைகொண்டான் போலீசார் சத்தியசீலனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
Related Tags :
Next Story