ஏ.சி. பழுது பார்த்தல் பயிற்சி


ஏ.சி. பழுது பார்த்தல் பயிற்சி
x
தினத்தந்தி 12 Aug 2023 1:45 AM IST (Updated: 12 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் பிரிட்ஜ், ஏ.சி. பழுது பார்த்தல் பயிற்சி வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது.

தேனி

தேனி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள, கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், பிரிட்ஜ், ஏ.சி. பழுது பார்த்தல் பயிற்சி வருகிற 21-ந்தேதி தொடங்கி 30 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி நடக்கிறது. 18 வயது நிரம்பிய வேலையில்லா கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் இந்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். பயிற்சி மற்றும் உணவு இலவசமாக அளிக்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்க கடன் ஆலோசனை அளிக்கப்படும். எனவே பயிற்சி பெற விரும்புபவர்கள் வருகிற 21-ந்தேதிக்கு முன்பாக தங்களின் புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றோடு நேரில் வந்து பெயர் பதிவு செய்யலாம். இத்தகவலை பயிற்சி நிலையத்தின் இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்தார்.

1 More update

Next Story