அண்ணா தொடர்பான விமர்சனம் குறித்து ஏ.சி.சண்முகம் கருத்து


அண்ணா தொடர்பான விமர்சனம் குறித்து ஏ.சி.சண்முகம் கருத்து
x

அண்ணா தொடர்பான விமர்சனம் குறித்து ஏ.சி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.

வேலூர்

புதிய நீதிக்கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாதுரை, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் எனது பிறந்த நாட்களை முன்னிட்டு ஏ.சி.எஸ்.மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மருத்துவர்களை தேடி மக்களல்ல, மக்களை தேடி மருத்துவர்கள் என்ற திட்டத்தின் கீழ் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இலவச மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஆம்பூர், குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வாணியம்பாடி, வேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 12 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளும், அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். எனது பிறந்தநாளையொட்டி வேலூரில் பொதுமக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, அண்ணா தொடர்பாக விமர்சனம் மற்றும் கருத்து மோதல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் தற்போது அனைவரும் ஒன்றிணைந்து வருகின்றனர். எல்லா பிரச்சினையும் முடியும் நேரம் புதிய பிரச்சினைகள் வேண்டாம் என்றார்.


Next Story