குடும்ப நல விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
எஸ்.வி.நகரம் ஊராட்சியில் குடும்ப நல விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஆரணி
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப நல விழிப்புணர்வு உறுதிமொழி மருத்துவ அலுவலர் ஹேம்நாத் தலைமையில் எடுக்கப்பட்டது.
மேலும் ஊராட்சி அலுவலகம், வங்கி, கடை வீதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றும், பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் டாக்டர் அபிராமி, வட்டார சுகாதார புள்ளியியலாளர் மனோகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, மேற்பார்வையாளர் அருளரசு, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ரவிக்குமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், அலுவலக கண்காணிப்பாளர் நடராஜன், சுகாதார செவிலியர்கள், நர்சிங் பயிற்சி செவிலியர்கள், மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.