பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள பேராம்பட்டு மலை குன்றின் மீது அமைந்துள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிககிழமையை யொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் திருப்பத்தூர் கோட்டை தெருவில் உள்ள கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story