குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 14 Jun 2023 3:00 AM IST (Updated: 14 Jun 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். அப்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி கல்வி பெறுவது குழந்தைகளின் உரிமை. எனவே 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன். அவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதை ஊக்குவிப்பேன். சமுதாயத்தில் குழந்தை தொழிலாளர் முறை முற்றிலுமாக இல்லாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற பாடுபடுவேன் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா, கண்ணன், தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story