புதிய டீன் பதவி ஏற்பு


புதிய டீன் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-02T00:16:53+05:30)

புதிய டீன் பதவி ஏற்பு

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீனாக பணியாற்றி வந்தவர் சுகந்தி ராஜகுமாரி. இவர் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பொது மருத்துவப்பிரிவு பேராசிரியராக பணியாற்றி வந்த பிரின்ஸ் பயஸ் பதவி உயர்வு பெற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் புதிய டீன் பிரின்ஸ் பயஸ் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் பொறுப்பு ஆவணங்களை பழைய டீன் சுகந்தி ராஜகுமாரி வழங்கினார். அப்போது மருத்துவ கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ் உடன் இருந்தார். இதைத் தொடர்ந்து புதிய டீன் பிரின்ஸ் பயஸ் நிருபர்களிடம் கூறுகையில், "ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனியார் ஆஸ்பத்திரியில் செய்ய முடியாத அறுவை சிகிச்சை கூட இங்கு செய்யப்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துமனையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.


Next Story