பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்றுதாளக்கரை ஊராட்சிக்கு புதிய குடிநீர் திட்டம்


பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்றுதாளக்கரை ஊராட்சிக்கு புதிய குடிநீர் திட்டம்
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கை ஏற்று தாளக்கரை ஊராட்சிக்கு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கை ஏற்று தாளக்கரை ஊராட்சிக்கு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்

பொள்ளாச்சி நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். கோவில்பாளையம் முதல் வெள்ளலூர் வரை செல்லும் சாலை 3 மீட்டர் சாலையை 10 மீட்டர் அகலமுள்ள இருவழிச்சாலையாக மாற்ற கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து, நிலம் கையகப்படுத்துவதற்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில் தேர்தல் காரணமாக பணி தொடங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த சாலை அமைத்தால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேலும் தென்னை நார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் கண்டெய்னர் லாரிகள் செல்வதற்கு இந்த சாலை பயனுள்ளதாக இருக்கும். செட்டிப்பாளையம்-வடசித்தூர் சாலையில் காரச்சேரியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். பொள்ளாச்சி நகராட்சி 34-வது வார்டு ஆர்.கே. நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் இடவசதி இல்லாததால் சுழற்சி முறையில் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் கட்டிட விரிவாக்கம் செய்ய பள்ளி வளாகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை முத்து லே-அவுட் பகுதிக்கு இடமாற்றம் செய்து பள்ளிக்கு தேவையான கூடுதல் பள்ளி கட்டிடம், நுலகம் அமைத்து கொடுக்க வேண்டும்.

குடிநீர் திட்டம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் தாளக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பொன்முத்து நகர், பசும்பொன் நகர் உள்பட 14 குடியிருப்புகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அம்பராம்பாளையம் ஆற்றில் இருந்து புதிதாக கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கி கொடுத்து இந்த பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து தர வேண்டும். காணியாலாம்பாளையம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டிம் கட்டி தர வேண்டும். பெரும்பதி-முத்துக்கவுண்டனூர் செல்லும் சாலையில் வரட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்த கொடுக்க வேண்டும் உள்பட 10 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது. தற்போது எனது கோரிக்கையை ஏற்று தாளக்கரை ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 14 குடியிருப்புகளுக்கு ரூ.9 கோடியே 70 லட்சம் செலவில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

1 More update

Next Story