ஓசூரில் லாரி தடுப்பு கம்பியில் மோதி விபத்து
கிருஷ்ணகிரி
ஓசூர்:
மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்து வெங்காய பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று பெங்களூரு வழியாக ஓசூருக்கு வந்து கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று அதிகாலை ஓசூரில் தர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு கம்பி மீது மோதிவிட்டு நிற்காமல் அங்கிருந்த உயர்கோபுர மின்கம்பத்தில் மோதி நின்றது.
எனினும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் மற்றொரு லாரியில் ஏற்றி அனுப்பப்பட்டது. இந்த விபத்து குறித்து ஓசூர் போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story