பர்கூர் அருகே லாரி மீது மோதி விபத்து, மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி


பர்கூர் அருகே லாரி மீது மோதி விபத்து, மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி
x
தினத்தந்தி 18 July 2023 1:00 AM IST (Updated: 18 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

பர்கூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சாப்பமுட்லு பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் ஹரிஷ் (வயது 18). அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் சச்சின் (20). கூலித்தொழிலாளிகளான ஹரிஷ், சச்சின் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை தங்கள் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் மாங்கனி கண்காட்சியை காண சென்றனர்.

ஜெகதேவி அருகே உள்ள ஐகுந்தம் கூட்ரோடு பகுதியில் சென்ற போது எதிரே வந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். சச்சினை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்த பர்கூர் போலீசார் ஹரிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story