வெவ்வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலி3 பேர் படுகாயம்


வெவ்வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலி3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Aug 2023 12:30 AM IST (Updated: 8 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர், சூளகிரியில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

வட மாநில ஊழியர்

பீகார் மாநிலம் நவதா மாவட்டத்தை சேர்ந்தவர் கவுதம் பஸ்வான் (வயது 26). இவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் மோட்டார்சைக்கிளில் சீதாராம் மேடு- இ.எஸ்.ஐ. உள்வட்ட சாலை இடையே கொத்தூர் ஜங்ஷன் பக்கமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக வந்த மொபட்டும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற கவுதம் பஸ்வான் மற்றும் மொபட்டில் வந்த ஓசூர் மூக்கண்டப்பள்ளி நிரஞ்சன்குமார் (27), அசோக் சவுத்ரி (24), ஜெய் சங்கர் (47) உள்ளிட்டோர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேன், கவுதம் பஸ்வான் மீது ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான கவுதம் பஸ்வான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு விபத்து

ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி அருகே உள்ள படுதாசம்பட்டியை சேர்ந்தவர் ராஜம்மா (60), கூலித்தொழிலாளி. வேலை நிமித்தமாக சூளகிரி வந்திருந்த அவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காமன்தொட்டி பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் மோதி சம்பவ இடத்திலேயே ராஜம்மா இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story