மத்திகிரி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலி


மத்திகிரி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலி
x

மத்திகிரி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலியானார்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 49), லாரி டிரைவர். இவர் ஓசூர் அருகே மத்திகிரி அருகே கப்பக்கல்லில் உள்ள ஒரு தனியார் இரும்பு நிறுவனத்துக்கு தனது லாரியை ஓட்டி வந்தார். அந்த நிறுவனத்தில் ஒரு லாரியில் இருந்து இரும்பு லோடு இறக்கும் பணி நடந்தது. அந்த பகுதியில் லாரியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு தனசேகர் அங்கு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியை டிரைவர் ஒருவர் பின்னோக்கி வேகமாக எடுத்தார். இதில் தனசேகர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story