Normal
லாரி கவிழ்ந்து விபத்து
லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நாமக்கல்
சேந்தமங்கலம்:
மோகனூரில் இருந்து ராசிபுரம் வரை நாமக்கல், சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி ஆகிய பகுதிகள் வழியாக புதிதாக புறவழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை பணிக்காக லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து, கொட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காளப்பநாயக்கன்பட்டி புதூர்மேடு பகுதியில் சாலை பணிக்காக மண் கொண்டு வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதையடுத்து சாலையில் கவிழ்ந்த லாரி மீட்கப்பட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story