சாலை தடுப்பில் வேன் மோதி விபத்து


சாலை தடுப்பில் வேன் மோதி விபத்து
x

முத்தூரில் தடுப்புச்சுவரில் சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திருப்பூர்

முத்தூரில் தடுப்புச்சுவரில் சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தடுப்புச்சுவரில் மோதிய வேன்

கோவையில் இருந்து வெற்றிலை பாரம் இறக்கி வைத்து விட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூருக்கு ஒரு சரக்கு வேன் புறப்பட்டு வந்தது. இந்த சரக்கு வேனை நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பாண்டமங்கலம் பொத்தனூர் பகுதியை சேர்ந்த மகாமுனி (வயது 30) ஓட்டி வந்தார். இந்த வேன் முத்தூர்-காங்கயம் பிரதான சாலையில் கணேசபுரம் பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த வேன் தடுப்புச்சுவரில் மோதிய வேகத்தில் வேனின் முன்புற கேபின் தனியாக கழன்று விழுந்து கவிழ்ந்தது. மேலும் வேனின் கண்ணாடி உடைந்து நொறுங்கி விழுந்தது. மேலும் வேனின் அடியில் உள்ள எஞ்சின் மற்றும் உதிரி பாகங்கள் உடைந்து பலத்த சேதமடைந்து கழன்று விழுந்தன. மேலும் வேனின் முன்புற இடது பக்கத்தில் இருந்த டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் ஆறாக ஓடியது. ஆனாலும் தார்ச்சாலையில் வேன் மோதிய வேகத்தில் உராய்வினால் தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை.

உயிர் தப்பிய டிரைவர்

இந்த விபத்தில் டிரைவர் மகாமுனி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் இந்த விபத்தில் தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 3 தடுப்புச்சுவர்கள் உடைந்து நொறுங்கி பலத்த சேதம் அடைந்தன. இந்த சரக்கு வேன் விபத்தினால் முத்தூர்-காங்கயம் பிரதான சாலையில் நேற்றுகாலை நேரத்தில் மெதுவாக சென்றன. பின்னர் நேற்றுகாலை 10.30 மணிக்கு விபத்து மீட்பு கிரேன் மூலம் மீட்கப்பட்டு அகற்றி அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story