மொபட் மீது லாரி மோதி விவசாயி சாவு


மொபட் மீது லாரி மோதி விவசாயி சாவு
x

மொபட் மீது லாரி மோதி விவசாயி இறந்தார்.

சேலம்

தலைவாசல்:

தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சியை சேர்ந்தவர் கலைமணி (வயது 60). விவசாயி. இவர் நேற்று முன்தினம் நாவக்குறிச்சி கிராமத்தில் இருந்து மொபட்டில் நத்தக்கரைக்கு சென்று கொண்டிருந்தார். நத்தக்கரை பிரிவு ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக சென்ற லாரி, மொபட் மீது மோதியது. இதில் கலைமணி படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story