பள்ளிக்கூட பஸ் - மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் படுகாயம்


பள்ளிக்கூட பஸ் - மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் படுகாயம்
x

பள்ளிக்கூட பஸ் - மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் படுகாயம் அடைந்தார்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே மருதிபட்டி -முறையூர் விலக்கு அருகே முறையூர் வழியாக திருப்பத்தூர் நோக்கி தனியார் பள்ளி பஸ் சென்றது. பஸ்சை பாண்டாங்குடி பகுதியை சேர்ந்த வெள்ளைக்குட்டி மகன் ஆறுமுகம் (வயது 60) ஓட்டினார். மருதிபட்டி விலக்கு அருகே பஸ் திரும்பியது. அப்போது சிலநீர்பட்டி அருகே ஒத்தப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்து மகன் செல்வராஜ் (37) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பஸ்சும் மோதிக்கொண்டன. இதில் பஸ்சின் முன்புற சக்கர பகுதிக்குள் மோட்டார் சைக்கிள் புகுந்தது. இதில் செல்வராஜ் படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story