பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ கவிழ்ந்தது-7 பேர் காயம்
பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம்
சேலம் கோட்டை பகுதியில் இருந்து 4 ரோடு நோக்கி நேற்று காலை ஒரு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவில் பள்ளி மாணவ, மாணவிகள் இருந்தனர். அப்சரா இறக்கம் அருகில் வந்த போது மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்தில் சிக்கி சாலையில் கிடந்தது. இதைக்கண்ட ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது நிலைதடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பள்ளி மாணவர்கள் 7 பேர் காயம் அடைந்தனர். ஆட்டோ டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆட்டோ கண்ணாடி உடைந்து சேதமானது. தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளி மாணவர்களை மீட்டனர். சம்பவ இடத்துக்கு பெற்றோர் வரவழைக்கப்பட்டு மாணவர்களை அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story