சாலையோரம் தலைக்கவசம் விற்ற கார் மோதி வியாபாரி சாவு


சாலையோரம் தலைக்கவசம் விற்ற கார் மோதி வியாபாரி சாவு
x

சாலையோரம் தலைக்கவசம் விற்ற கார் மோதி வியாபாரி இறந்தார்.

சேலம்

ஓமலூர்:

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ராமரு கோவாடா. இவருடைய மகன் ரமணா (வயது 21). இவர் ஓமலூர் அருகே குப்பூர் பகுதியில் சாலையோரம் கடை அமைத்து தலைக்கவசம் விற்று வந்தார். நேற்று அவர் வழக்கம்போல் தலைக்கவசம் விற்று கொண்டிருந்தார். அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி கார் ஒன்று வந்தது. இந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரமணா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story