சரக்கு வேன் மோதி வாலிபர் சாவு


சரக்கு வேன் மோதி வாலிபர் சாவு
x

சரக்கு வேன் மோதி வாலிபர் இறந்தார்.

சேலம்

கொண்டலாம்பட்டி:

கொண்டலாம்பட்டி அருகே எருமாபாளையம் பகுதி செல்லக்குட்டி காட்டைச் சேர்ந்த சங்கர் மகன் முரளி (வயது 24). இவர், அழகாபுரத்தில் தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முரளி உடல் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story