பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்


பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்
x

பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகங்கை


சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொள்ளுக்குடி பட்டி விலக்கு அருகே புதுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி தனியார் பஸ் வந்துகொண்டு இருந்தது. அப்போது மற்றொரு பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து புதருக்குள் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து எஸ். எஸ். கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story