மொரப்பூரில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த போலீஸ்காரர் பலி


மொரப்பூரில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த போலீஸ்காரர் பலி
x

மொரப்பூர் ரெயில் நிலையத்தில், ஓடும் ரெயிலில் இருந்து தவறிவிழுந்த போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி

மொரப்பூர்:

போலீஸ்காரர்

தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் வேலு (வயது 30). இவர் சென்னை பூக்கடை ேபாலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் மஞ்சள் காமாலையால் அவதிப்பட்ட அவர், விடுமுறையில் தனது சொந்த ஊரான தர்மபுரிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து வாலாஜாவிற்கு சென்று மஞ்சள் காமாலைக்கு மருத்துவம் பார்த்தார்.

இதையடுத்து வாலாஜாவில் இருந்து நேற்று காலையில் கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ரெயில் மொரப்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் ஓடும் ெரயிலில் இருந்து அவர் இறங்க முயன்றார்.

தவறிவிழுந்து பலி

அப்போது ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் உள்ள சந்தில் அவரது கால் சிக்கியது. இதனால் நிலைதடுமாறிய அவர் ரெயிலில் இருந்து தவறி தண்டவாளத்துக்குள் விழுந்தார். இதில் அவர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து குறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story