பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி


பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
x

பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலியானார்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வ விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 45). இவர் செல்வநாயகபுரத்தில் இருந்து ராமநாதபுரத்தில் உள்ள கூரி சத்த அய்யனார் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது டவுன் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து செல்வ நாயகபுரம் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் டவுன் பஸ் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story