தேனி அருகே மின்கம்பத்தில் மோதிய மினி பஸ்


தேனி அருகே மின்கம்பத்தில் மோதிய மினி பஸ்
x

தேனி அருகே மின்கம்பத்தில் மினி பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

தேனி

தேனி அருகே உள்ள பூதிப்பூரத்தில் இருந்து தேனி நோக்கி தனியார் மினி பஸ் ஒன்று இன்று மதியம் சென்று கொண்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

பழனிசெட்டிபட்டியில் உள்ள தியேட்டர் அருகில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மினி பஸ் மோதி நின்றது.

இதில் மின்கம்பம் முறிந்து சேதமடைந்தது. இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அபாயகுரல் எழுப்பினர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story