விபத்தில் முதியவர் பலி


விபத்தில் முதியவர் பலி
x

விபத்தில் முதியவர் பலியானார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர் கீழ குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 62). இவர் தனது மகன் கதிர்வேலன் அமராவதிபுதூரில் நடத்தி வரும் வணிக நிறுவனத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக கருப்பையா ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் சாலையோரம் இருந்த பாலத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சோமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story