லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 3 பேர் காயம்


லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 3 பேர் காயம்
x

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 3 பேர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகராஜ் (வயது 40). இவர் மோட்டார் சைக்கிளில் தனது தாயார் சின்னம்மாள் (65), உறவினர் கச்சம்மாள் (62) ஆகியோருடன் திருப்புவனத்திற்கு வந்து கொண்டிருந்தார். நான்கு வழிச்சாலையில் சக்குடி விலக்கு பகுதியில் வரும்போது, சக்குடி பாலத்தின் வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து லாரி டிரைவர் முனீஸ்வரன் (32) மீது திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story