வேன் மோதி மீன் வியாபாரி உள்பட 10 பேர் படுகாயம்


வேன் மோதி மீன் வியாபாரி உள்பட 10 பேர் படுகாயம்
x

வேன் மோதி மீன் வியாபாரி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

முதுகுளத்தூர் அருகே பெரிய இலை கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி (வயது38). மீன் வியாபாரியான இவர் சாயல்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மலட்டாறு விலக்கு அருகே சென்றுகொண்டு இருந்தார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற வேன் மீன் வியாபாரி கலைமணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். வேனில் இருந்த 10 பேர் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ராமநாதபுரத்தை சேர்ந்த வேன் டிரைவர் சதீஷ்குமார் (35) சாயல்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story