கார் மோதி வாலிபர் பலி
கார் மோதி வாலிபர் பலியானார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள தெற்குத்தரவை வள்ளிமாடன் வலசையை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் மகன் சாமிநாதன் (வயது32). திருமணமாகவில்லை. டிராக்டர் ஓட்டி தொழில் செய்து வந்தார். இவர் பட்டணம்காத்தான் மீனாட்சி நகரில் உள்ள சித்தப்பா செல்வம் என்பவரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு செல்ல கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி பரிதாபமாக பலியானார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவர் கடலாடி பொதிகுளம் ஜெயகண்ணன் என்பவரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story