மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம்
சாயல்குடி,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரனார் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது51). ஆசிரியரான இவர் சாயல்குடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கிழக்கு கடற்கரை சாலையில் நடை பயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த கீழமுந்தல் கிராமத்தை சேர்ந்த தட்சணா மூர்த்தி மோதினார். இதில் ஆசிரியர் படுகாயம் அடைந்தார். உடனே சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கீழமுந்தல் கிராமத்தை சேர்ந்த தட்சணா மூர்த்தியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story